வாழ்க்கைப் பாடம்

August 30th, 2007

lesson

வாழ்க்கை எனும் பள்ளிக்கூடத்தில்

நாம் அனுபவப்பாடம் பயின்று வருகிறோம்

Continue reading “வாழ்க்கைப் பாடம்” »

கோலங்கள்

August 29th, 2007

rangoli

அழகான கோலம் போடலாம் என்று நினைத்து

என் வாழ்க்கையில் ஒவ்வொறு புள்ளிகளையும்

நான் போடுகிறேன்!!!

ஆண்டவனோ இந்த புள்ளிகளை வெய்த்து

வேறொறு கோலம் போடுகிறான்,

அலங்கோலமாய்!!!

தேடல் முடிந்தது

August 27th, 2007

search  completed

காதலின் தேடல் இளமையில்…

அன்பின் தேடல் முதுமையில்…

வாழ்கையின் தேடல் எளிமையில்…

பதவியின் தேடல் தலைமையில்…

இன்பத்தின் தேடல் பன்மையில்…

துன்பத்தின் தேடல் பொருமையில்…

சந்தோஷத்தின் தேடல் பெருமையில்…

கோபத்தின் தேடல் வன்மையில்…

வெற்றியின் தேடல் வலிமையில்…

தோல்வியின் தேடல் வெறுமையில்…

உண்மையின் தேடல் பொய்மையில்…

பொய்யான தேடல் உண்மையில்… …முடிந்தது

முட்டாள் ஆக்காதே

August 27th, 2007

நீ உண்னை அறிவாளியாக காட்டிக்கொள்ள

என்னை ஏன் முட்டாள் ஆக்குகின்றாய் ?

– சூழ்னிலையே! எனை முட்டாள் ஆக்காதே!!!

பிரச்சனைகள்

August 27th, 2007

நம் வாழ்க்கையே பிரச்சனையாகிவிடும்,

நமக்கு பிரச்சனைகளே இல்லாமள் போனால்.

பிரச்சனைகள் இருப்பதால் தான்,

தீற்வைத் தேடி நாம் வாழ்ந்து கொன்டு இருக்கிறோம்.

ஊர் பேச்சு

August 20th, 2007

(படித்ததில் பிடித்தது)

பசி மயக்கத்தில், தல்லாடி

நான் நடந்தேன்

என்னைப் பார்த்து ஊர் பேசியது

குடிகாறன் என்று

சொல்லாத காதல்

August 16th, 2007

சொல்லாத காதல் தேன்கூட்டைப் போன்றது

அதை கலைத்தால்

ஒன்று காதல் கைகூடலாம்

இல்லை தேனி கொட்டவும் செய்யலாம்

நீங்களூம் கவிஞன் தான்

August 14th, 2007

நீங்களூம் கவிஞன் தான்

– உங்களுடன்

தனிமையும் வெறுப்பும் சேரும்போது

சுதந்திரம் என்பது …

August 14th, 2007

சுதந்திரம் என்பது ஒற்றுமை உணற்வு

– பறிக்கப்படும் வரை!!!

சுதந்திரத்தின் நிலமை

August 14th, 2007

பேச்சு சுதந்திரம்
– மற்றவர்களை அவதூறாய் பேச;
எழுத்து சுதந்திரம்
– கிசுகிசுக்கள் எழுத;
பத்திரிக்கை சுதந்திரம்
– தனினபர் சொத்து குவிக்க;
பெண் சுதந்திரம்
– அறைகுறை ஆடை அணிய;
சமயத் தேர்வு சுதந்திரம்
– என்னை நானே விற்க;

இத்தனை சுதந்திரத்தையும்
தவறாய் பயன்படுத்துவதும்
நம் சுதந்திரமே

சுதந்திரத்தை போற்றுவோம்…
உண்மையான சுதந்திரத்தை நாடுவோம்…

சுதந்திர தின வாழ்த்துக்கள்


என்றும் அன்புடன்,
தனா

( எனுடைய சுதந்திரம் – இந்த கருத்தை எழுதவது;
உங்களுடைய சுதந்திரம் – இதை படித்து தங்கள் கருத்தை கூருவது )