நிலவின் இளமை ரகசியம்

February 16th, 2008 by dhans

முழு நிலவின் இளமை,

அது தேய்வதில் தான்.

நம் மனதின் இளமை,

நாம் தாழ்வதில் தான்!!!

Full Moon
Continue reading “நிலவின் இளமை ரகசியம்” »

நம் மனசாட்சி

February 11th, 2008 by dhans

வெள்ளை வீடு

பூட்டிக் கிடக்கும் வெள்ளை வீடு – நம் மனசாட்சி.

இந்த பூட்டின் சாவி நம் கையில் இருக்க,

நாமோ அந்த வீட்டையே

துளைத்துவிட்டு தேடுகின்றோம்!!!

பகல் கனவு

February 10th, 2008 by dhans

day-dreamer(C) ktp

இரவு முழுவதும் விழித்திருந்தேன்

விடியுமென்று.

விடிந்தவுடன் தூங்கிவிட்டேன்,

நீ வந்து போகும் பகல் கனவு

பலிக்குமென்று!!!

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

February 4th, 2008 by dhans

அன்பிற்க்கு பஞ்சமில்லை,

உயிர் நட்பிற்க்கு வஞ்சமில்லை.

பகைமைக்கு நெஞ்சமில்லை,

இந்த புத்தாண்டிலோ அதற்க்கு தஞ்சமில்லை!!!

பகைமையில்லா உலகம் காண்போம் இந்த புத்தாண்டில்.

2008

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!

நினைப்பதெல்லாம் நடப்பதில்லை

November 21st, 2007 by dhans

ninaipathellam

நினைப்பதெல்லாம், நடப்பதில்லை …

நடப்பதெல்லாம், பிடிப்பதில்லை …

பிடிப்பதெல்லாம், நிலைப்பதில்லை, …

நிலைப்பதெல்லாம், நல்லதாய் இருப்பதில்லை …

நல்லதெல்லாம், நாம் என்றுமே நினைப்பதில்லை …

அதனால் … நினைப்பதெல்லாம், நடப்பதில்லை.

பொய்யில் உண்மை – உண்மையில் பொய்

November 6th, 2007 by dhans

பொய்

பொய்யே பொய்யாகிவிடும்,
சிறிதளவும் உண்மை இல்லா விட்டால்.

உண்மையும் பொய்யாகிவிடும்,
கடுகளவும் பொய் இருந்து விட்டால்.

இது பொய்யில் உண்மை, அது உண்மையில் பொய்

நிலவுக்கு தாலாட்டு

October 22nd, 2007 by dhans

 நிலவு

நிலவே…

நீ உதித்தவுடன், பாடும்

அமைதியான தாலாட்டை கேட்டு

இந்த உலகமே உறங்குகிறது

நீ மட்டும் விழித்து கொண்டு இருக்கிறாய்!!!

வா…

என் மடியில் வந்து கண் மூடு

நீ உறங்க நான் தாலாட்டு பாடுகிறேன்…

60 வயதிலும் அடிமை!!!

October 4th, 2007 by dhans

Gandhi

அண்று -
அன்னியரிடம் இருந்து
சுதந்திரம் பெற்றோம்.
உழைத்தோம்,
பாடுபட்டோம்,
வளர்ந்தோம்,
முன்னேறினோம்.

-

இன்று -
60 ஆண்டுகளுக்கு பிறகும்,
அடிமையாய் தான் இருக்கின்றோம்,
பொருளாதார வளர்ச்சி
என்ற பெயரில்!!!

-

அடிமை மோகம் மாறவில்லை,
உறுமாறி இருக்கிறது!!!

நம் வாழ்க்கை முறையை மாற்றிய,
அன்னிய LifeStyle மோகமாய்,
உறுமாறி இருக்கிறது!!!

இந்த மோகம் குறைந்து,
உன்மை சுதந்திரம் பெேற,
இன்னொறு காந்தி தான் பிறக்க வேண்டும்!!!

முற்றுப்புள்ளி

October 4th, 2007 by dhans

sentence

வாழ்க்கை என்னும் வாக்கியத்தில்

நான் மட்டும் தனியாய்!!!

ஒரே புள்ளியாய்!!! முற்றுப்புள்ளியாய்.

.

குடும்பம், நட்பு, சமூகம் …

என்று பல புள்ளிகள் வந்து சேர்ந்தன

வார்த்தைகள் இல்லா வாக்கியமானது

என் வாழ்க்கை… …………………..

மகிழ்ச்சியுடன்…………………..

ஏற்காடு

October 3rd, 2007 by dhans

ஏர் பூட்டி உழுது,

செழிப்பானதோ

இந்த ஏற்காடு

***

பச்சை மனம் மாறாப்

பிள்ளை போல, இன்றும்

பச்சை நிறம் மாறாக்

காடு, இந்த ஏற்காடு

***

எழைகளின் ஊட்டி,

என்றும்

மாசு படாத ஊட்டி

இந்த ஏற்காடு