தப்பு செய்

Posted on February 28th, 2008 by dhans.
Categories: உண்மை, புலம்பல், மொக்கை.

right-wrong 

தப்பு செய்!!! ஆனா தப்பா செய்யாதே!!!

தப்பு செஞ்ச தப்பில்ல, அதையே

தப்பா செஞ்சா தான் தப்பு!!!!

இந்த காலத்துல,

தப்பு செய்றவன் தைரியசாலி, புத்திசாலி.

தப்பு செய்ய பயப்படுறவன் கோழை, பயந்தாங்கோலி.

தப்பே செய்யாதவன்  மனுசனே இல்ல.

அதனால எல்லாரும் தப்ப தப்பாம செய்யனும்.

1 comment.

மதுவும் மாதுவும்

Posted on February 20th, 2008 by dhans.
Categories: உண்மை, மொக்கை.

மது மாது,

இவை இரண்டையும்,

தொடாதவன் வாழ்க்கை கேலி!

தொட்டவன் வாழ்க்கையில்

மற்றதெல்லாம் போலி!!!

மது.

0 comments.

நினைப்பதெல்லாம் நடப்பதில்லை

Posted on November 21st, 2007 by dhans.
Categories: கருத்து, தத்துவம், மொக்கை, வாழ்க்கை.

ninaipathellam

நினைப்பதெல்லாம், நடப்பதில்லை …

நடப்பதெல்லாம், பிடிப்பதில்லை …

பிடிப்பதெல்லாம், நிலைப்பதில்லை, …

நிலைப்பதெல்லாம், நல்லதாய் இருப்பதில்லை …

நல்லதெல்லாம், நாம் என்றுமே நினைப்பதில்லை …

அதனால் … நினைப்பதெல்லாம், நடப்பதில்லை.

0 comments.

T20 உலகக் கோப்பை

Posted on September 25th, 2007 by dhans.
Categories: மொக்கை, வாழ்க்கை, வாழ்த்து.

வாழ்கையும் கிரிக்கெட் போலத் தான்
உலகக் கோப்பையில் முதல்
சுற்றுலேயே தோற்றாலும்,
T20 உலகக் கோப்பை போல
நமக்கென சின்னதாக ஒரு
சந்தர்ப்பமாவது அமையும்,
நாம் வாழ்க்கையில் ஜெயிக்க!!!

T20 உலகக் கோப்பை ஜெயித்த
நம் இந்திய அனிக்கு வாழ்த்துக்கள்.

0 comments.

அழகு ஆபத்தானது

Posted on September 25th, 2007 by dhans.
Categories: அழகு, எதார்த்தம், மொக்கை.

azhagu

அழகு ஆபத்தானதுஎன்று செல்கின்றனர்…

அதனால் தானோ அதைக்

கண்டவுடன் நாம்

மயங்குகின்றோம்,

பயத்தில்!!!

அழகு தானே ஆபத்தானது

அழகானவர்கள் இல்லையே ?

3 comments.