| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| « Feb | ||||||
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||
Posted on February 28th, 2008 by dhans.
Categories: உண்மை, புலம்பல், மொக்கை.
தப்பு செய்!!! ஆனா தப்பா செய்யாதே!!!
தப்பு செஞ்ச தப்பில்ல, அதையே
தப்பா செஞ்சா தான் தப்பு!!!!
இந்த காலத்துல,
தப்பு செய்றவன் தைரியசாலி, புத்திசாலி.
தப்பு செய்ய பயப்படுறவன் கோழை, பயந்தாங்கோலி.
தப்பே செய்யாதவன் மனுசனே இல்ல.
அதனால எல்லாரும் தப்ப தப்பாம செய்யனும்.
Posted on February 20th, 2008 by dhans.
Categories: உண்மை, மொக்கை.
மது மாது,
இவை இரண்டையும்,
தொடாதவன் வாழ்க்கை கேலி!
தொட்டவன் வாழ்க்கையில்
மற்றதெல்லாம் போலி!!!
Posted on February 18th, 2008 by dhans.
Categories: உண்மை, தத்துவம், வாழ்க்கை.
பிடித்ததெல்லாம் கிடைத்துவிட்டால், அது
கிடைத்தபின் பிடிப்பதில்லை.
கிடைத்ததெல்லாம் பிடித்துவிட்டால், அது
பிடித்தபின் நிலைப்பதில்லை!!!

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால், அது
நடந்தபின், அதை நாம் நினைப்பதில்லை.
நடந்ததையே நினைத்திருந்தால், அது நாம்
நினைப்பதுபோல் நடக்க போவதில்லை!!!
Posted on February 11th, 2008 by dhans.
Categories: உண்மை, தத்துவம், வாழ்க்கை.

பூட்டிக் கிடக்கும் வெள்ளை வீடு - நம் மனசாட்சி.
இந்த பூட்டின் சாவி நம் கையில் இருக்க,
நாமோ அந்த வீட்டையே
துளைத்துவிட்டு தேடுகின்றோம்!!!
Posted on November 6th, 2007 by dhans.
Categories: உண்மை, தத்துவம், புலம்பல்.

பொய்யே பொய்யாகிவிடும்,
சிறிதளவும் உண்மை இல்லா விட்டால்.
உண்மையும் பொய்யாகிவிடும்,
கடுகளவும் பொய் இருந்து விட்டால்.
இது பொய்யில் உண்மை, அது உண்மையில் பொய்