பகல் கனவு

Posted on February 10th, 2008 by dhans.
Categories: உணர்ச்சி, எதார்த்தம், காதல்.

day-dreamer(C) ktp

இரவு முழுவதும் விழித்திருந்தேன்

விடியுமென்று.

விடிந்தவுடன் தூங்கிவிட்டேன்,

நீ வந்து போகும் பகல் கனவு

பலிக்குமென்று!!!

0 comments.

60 வயதிலும் அடிமை!!!

Posted on October 4th, 2007 by dhans.
Categories: உணர்ச்சி, கருத்து.

Gandhi

அண்று -
அன்னியரிடம் இருந்து
சுதந்திரம் பெற்றோம்.
உழைத்தோம்,
பாடுபட்டோம்,
வளர்ந்தோம்,
முன்னேறினோம்.

-

இன்று -
60 ஆண்டுகளுக்கு பிறகும்,
அடிமையாய் தான் இருக்கின்றோம்,
பொருளாதார வளர்ச்சி
என்ற பெயரில்!!!

-

அடிமை மோகம் மாறவில்லை,
உறுமாறி இருக்கிறது!!!

நம் வாழ்க்கை முறையை மாற்றிய,
அன்னிய LifeStyle மோகமாய்,
உறுமாறி இருக்கிறது!!!

இந்த மோகம் குறைந்து,
உன்மை சுதந்திரம் பெேற,
இன்னொறு காந்தி தான் பிறக்க வேண்டும்!!!

0 comments.

முற்றுப்புள்ளி

Posted on October 4th, 2007 by dhans.
Categories: உணர்ச்சி, புலம்பல், வாழ்க்கை.

sentence

வாழ்க்கை என்னும் வாக்கியத்தில்

நான் மட்டும் தனியாய்!!!

ஒரே புள்ளியாய்!!! முற்றுப்புள்ளியாய்.

.

குடும்பம், நட்பு, சமூகம் …

என்று பல புள்ளிகள் வந்து சேர்ந்தன

வார்த்தைகள் இல்லா வாக்கியமானது

என் வாழ்க்கை… …………………..

மகிழ்ச்சியுடன்…………………..

0 comments.

மறக்க நினைத்து…

Posted on September 16th, 2007 by dhans.
Categories: உணர்ச்சி, கருத்து, காதல்.

 marakka

உன்னை மறக்க நினைத்தாலே,

என் நினைவாக நீ வருகிறாய்.

உன்னை நான் நினைத்தாலோ,

என்னையே மறக்க செய்கிறாய்.

உன்னை மறக்க நினைப்பதா ?

இல்லை நினைத்து என்னை மறப்பதா ?

2 comments.

மழையின் சங்கீதம்

Posted on September 12th, 2007 by dhans.
Categories: உணர்ச்சி, கருத்து, தமிழ், மழை.

மழையே…

சப்தம் இல்லா
தனிமையை விரும்பும்
என்னக்கு
பிடித சப்தம்
உன் சங்கீதம்

நீ பொழியும் போது தான்
எங்கள் தெருக்களும்
வாகனம் இன்றி
அமைதியாகிவிடுகிறது.
அமைதியை கொடுத்தது
உன்ன் சங்கீதம்

தன்னந் தனியாய்
உன்னுடன் நான்
நடக்கும்போது
என் மனதில் எழும்
எண்ணங்களுக்கு எல்லாம்
கைதட்டுவது போல்
என் குடையின் மேல்
உன்ன் சங்கீதம்

பலருக்கு மழையில் நனைந்து மகிழ ஆசை
சிலருக்கு மழையை பார்து ரசிக்க ஆசை
என்னக்கொ மழையை கேட்டு ரசிக்க ஆசை

1 comment.