
Archive for the ‘வாழ்க்கை’ Category
கொடுப்பதும் கெடுப்பதும்
Friday, August 14th, 2009
பிடித்ததும் கிடைத்ததும்
Monday, February 18th, 2008பிடித்ததெல்லாம் கிடைத்துவிட்டால், அது
கிடைத்தபின் பிடிப்பதில்லை.
கிடைத்ததெல்லாம் பிடித்துவிட்டால், அது
பிடித்தபின் நிலைப்பதில்லை!!!
நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால், அது
நடந்தபின், அதை நாம் நினைப்பதில்லை.
நடந்ததையே நினைத்திருந்தால், அது நாம்
நினைப்பதுபோல் நடக்க போவதில்லை!!!
நம் மனசாட்சி
Monday, February 11th, 2008பூட்டிக் கிடக்கும் வெள்ளை வீடு – நம் மனசாட்சி.
இந்த பூட்டின் சாவி நம் கையில் இருக்க,
நாமோ அந்த வீட்டையே
துளைத்துவிட்டு தேடுகின்றோம்!!!
நினைப்பதெல்லாம் நடப்பதில்லை
Wednesday, November 21st, 2007நினைப்பதெல்லாம், நடப்பதில்லை …
நடப்பதெல்லாம், பிடிப்பதில்லை …
பிடிப்பதெல்லாம், நிலைப்பதில்லை, …
நிலைப்பதெல்லாம், நல்லதாய் இருப்பதில்லை …
நல்லதெல்லாம், நாம் என்றுமே நினைப்பதில்லை …
அதனால் … நினைப்பதெல்லாம், நடப்பதில்லை.
முற்றுப்புள்ளி
Thursday, October 4th, 2007வாழ்க்கை என்னும் வாக்கியத்தில்
நான் மட்டும் தனியாய்!!!
ஒரே புள்ளியாய்!!! முற்றுப்புள்ளியாய்.
.
குடும்பம், நட்பு, சமூகம் …
என்று பல புள்ளிகள் வந்து சேர்ந்தன
வார்த்தைகள் இல்லா வாக்கியமானது
என் வாழ்க்கை… …………………..
மகிழ்ச்சியுடன்…………………..
T20 உலகக் கோப்பை
Tuesday, September 25th, 2007வாழ்கையும் கிரிக்கெட் போலத் தான்
உலகக் கோப்பையில் முதல்
சுற்றுலேயே தோற்றாலும்,
T20 உலகக் கோப்பை போல
நமக்கென சின்னதாக ஒரு
சந்தர்ப்பமாவது அமையும்,
நாம் வாழ்க்கையில் ஜெயிக்க!!!
T20 உலகக் கோப்பை ஜெயித்த
நம் இந்திய அனிக்கு வாழ்த்துக்கள்.
பிரிந்த உறவுகள்
Thursday, September 6th, 2007முறிந்த உறவுகள் பிரியக் கூடும்
ஆனால்
பிரிந்த உறவுகள் முடிவதில்லை
நினைவுகளால்
தொடந்து கொண்டுதான் இருக்கும்
கோலங்கள்
Wednesday, August 29th, 2007அழகான கோலம் போடலாம் என்று நினைத்து
என் வாழ்க்கையில் ஒவ்வொறு புள்ளிகளையும்
நான் போடுகிறேன்!!!
ஆண்டவனோ இந்த புள்ளிகளை வெய்த்து
வேறொறு கோலம் போடுகிறான்,
அலங்கோலமாய்!!!
தேடல் முடிந்தது
Monday, August 27th, 2007காதலின் தேடல் இளமையில்…
அன்பின் தேடல் முதுமையில்…
வாழ்கையின் தேடல் எளிமையில்…
பதவியின் தேடல் தலைமையில்…
இன்பத்தின் தேடல் பன்மையில்…
துன்பத்தின் தேடல் பொருமையில்…
சந்தோஷத்தின் தேடல் பெருமையில்…
கோபத்தின் தேடல் வன்மையில்…
வெற்றியின் தேடல் வலிமையில்…
தோல்வியின் தேடல் வெறுமையில்…
உண்மையின் தேடல் பொய்மையில்…
பொய்யான தேடல் உண்மையில்… …முடிந்தது
பிரச்சனைகள்
Monday, August 27th, 2007நம் வாழ்க்கையே பிரச்சனையாகிவிடும்,
நமக்கு பிரச்சனைகளே இல்லாமள் போனால்.
பிரச்சனைகள் இருப்பதால் தான்,
தீற்வைத் தேடி நாம் வாழ்ந்து கொன்டு இருக்கிறோம்.