
Archive for the ‘தத்துவம்’ Category
கொடுப்பதும் கெடுப்பதும்
Friday, August 14th, 2009
பிடித்ததும் கிடைத்ததும்
Monday, February 18th, 2008பிடித்ததெல்லாம் கிடைத்துவிட்டால், அது
கிடைத்தபின் பிடிப்பதில்லை.
கிடைத்ததெல்லாம் பிடித்துவிட்டால், அது
பிடித்தபின் நிலைப்பதில்லை!!!
நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால், அது
நடந்தபின், அதை நாம் நினைப்பதில்லை.
நடந்ததையே நினைத்திருந்தால், அது நாம்
நினைப்பதுபோல் நடக்க போவதில்லை!!!
நம் மனசாட்சி
Monday, February 11th, 2008பூட்டிக் கிடக்கும் வெள்ளை வீடு – நம் மனசாட்சி.
இந்த பூட்டின் சாவி நம் கையில் இருக்க,
நாமோ அந்த வீட்டையே
துளைத்துவிட்டு தேடுகின்றோம்!!!
நினைப்பதெல்லாம் நடப்பதில்லை
Wednesday, November 21st, 2007நினைப்பதெல்லாம், நடப்பதில்லை …
நடப்பதெல்லாம், பிடிப்பதில்லை …
பிடிப்பதெல்லாம், நிலைப்பதில்லை, …
நிலைப்பதெல்லாம், நல்லதாய் இருப்பதில்லை …
நல்லதெல்லாம், நாம் என்றுமே நினைப்பதில்லை …
அதனால் … நினைப்பதெல்லாம், நடப்பதில்லை.
பொய்யில் உண்மை – உண்மையில் பொய்
Tuesday, November 6th, 2007பொய்யே பொய்யாகிவிடும்,
சிறிதளவும் உண்மை இல்லா விட்டால்.
உண்மையும் பொய்யாகிவிடும்,
கடுகளவும் பொய் இருந்து விட்டால்.
இது பொய்யில் உண்மை, அது உண்மையில் பொய்
வாழ்க்கைப் பாடம்
Thursday, August 30th, 2007வாழ்க்கை எனும் பள்ளிக்கூடத்தில்
நாம் அனுபவப்பாடம் பயின்று வருகிறோம்
தேடல் முடிந்தது
Monday, August 27th, 2007காதலின் தேடல் இளமையில்…
அன்பின் தேடல் முதுமையில்…
வாழ்கையின் தேடல் எளிமையில்…
பதவியின் தேடல் தலைமையில்…
இன்பத்தின் தேடல் பன்மையில்…
துன்பத்தின் தேடல் பொருமையில்…
சந்தோஷத்தின் தேடல் பெருமையில்…
கோபத்தின் தேடல் வன்மையில்…
வெற்றியின் தேடல் வலிமையில்…
தோல்வியின் தேடல் வெறுமையில்…
உண்மையின் தேடல் பொய்மையில்…
பொய்யான தேடல் உண்மையில்… …முடிந்தது
சுதந்திரம் என்பது …
Tuesday, August 14th, 2007சுதந்திரம் என்பது ஒற்றுமை உணற்வு
– பறிக்கப்படும் வரை!!!