(C) ktp
இரவு முழுவதும் விழித்திருந்தேன்
விடியுமென்று.
விடிந்தவுடன் தூங்கிவிட்டேன்,
நீ வந்து போகும் பகல் கனவு
பலிக்குமென்று!!!
(C) ktp
இரவு முழுவதும் விழித்திருந்தேன்
விடியுமென்று.
விடிந்தவுடன் தூங்கிவிட்டேன்,
நீ வந்து போகும் பகல் கனவு
பலிக்குமென்று!!!
அண்று –
அன்னியரிடம் இருந்து
சுதந்திரம் பெற்றோம்.
உழைத்தோம்,
பாடுபட்டோம்,
வளர்ந்தோம்,
முன்னேறினோம்.
–
இன்று –
60 ஆண்டுகளுக்கு பிறகும்,
அடிமையாய் தான் இருக்கின்றோம்,
பொருளாதார வளர்ச்சி
என்ற பெயரில்!!!
–
அடிமை மோகம் மாறவில்லை,
உறுமாறி இருக்கிறது!!!
நம் வாழ்க்கை முறையை மாற்றிய,
அன்னிய LifeStyle மோகமாய்,
உறுமாறி இருக்கிறது!!!
இந்த மோகம் குறைந்து,
உன்மை சுதந்திரம் பெேற,
இன்னொறு காந்தி தான் பிறக்க வேண்டும்!!!
வாழ்க்கை என்னும் வாக்கியத்தில்
நான் மட்டும் தனியாய்!!!
ஒரே புள்ளியாய்!!! முற்றுப்புள்ளியாய்.
.
குடும்பம், நட்பு, சமூகம் …
என்று பல புள்ளிகள் வந்து சேர்ந்தன
வார்த்தைகள் இல்லா வாக்கியமானது
என் வாழ்க்கை… …………………..
மகிழ்ச்சியுடன்…………………..
உன்னை மறக்க நினைத்தாலே,
என் நினைவாக நீ வருகிறாய்.
உன்னை நான் நினைத்தாலோ,
என்னையே மறக்க செய்கிறாய்.
உன்னை மறக்க நினைப்பதா ?
இல்லை நினைத்து என்னை மறப்பதா ?
மழையே…
சப்தம் இல்லா
தனிமையை விரும்பும்
என்னக்கு
பிடித சப்தம்
உன் சங்கீதம்
நீ பொழியும் போது தான்
எங்கள் தெருக்களும்
வாகனம் இன்றி
அமைதியாகிவிடுகிறது.
அமைதியை கொடுத்தது
உன்ன் சங்கீதம்
தன்னந் தனியாய்
உன்னுடன் நான்
நடக்கும்போது
என் மனதில் எழும்
எண்ணங்களுக்கு எல்லாம்
கைதட்டுவது போல்
என் குடையின் மேல்
உன்ன் சங்கீதம்
பலருக்கு மழையில் நனைந்து மகிழ ஆசை
சிலருக்கு மழையை பார்து ரசிக்க ஆசை
என்னக்கொ மழையை கேட்டு ரசிக்க ஆசை
இரைத் தேடி கூட்டை பிறிந்து சென்ற
தாய்ப் பறவை போல்
பணம் பதவியைத் தேடி எங்களைப் பிறிந்த நன்பா
இரை கிடைத்ததும் அந்த தாய்ப் பறவை போல
திரும்பி வருவாயா ?
எங்களோடு நட்பு பாராட்ட!!!
அழகு, அறிவு, திறமை, நிறம், பொருளாதாரம், ஆரோக்கியம் … ..(etc..)
என்று பல ஏற்றத்தாழ்வுகளை கொடுத்தவன்,
உனர்ச்சியயை மட்டும் ஒரெ மாதிரி படைத்தது ஏன்?
என் உனர்ச்சியுடன் விளையாடும் அந்தஆண்டவன் பொல்லாதவன் தான்.
நீங்களூம் கவிஞன் தான்
– உங்களுடன்
தனிமையும் வெறுப்பும் சேரும்போது
பேச்சு சுதந்திரம்
– மற்றவர்களை அவதூறாய் பேச;
எழுத்து சுதந்திரம்
– கிசுகிசுக்கள் எழுத;
பத்திரிக்கை சுதந்திரம்
– தனினபர் சொத்து குவிக்க;
பெண் சுதந்திரம்
– அறைகுறை ஆடை அணிய;
சமயத் தேர்வு சுதந்திரம்
– என்னை நானே விற்க;
இத்தனை சுதந்திரத்தையும்
தவறாய் பயன்படுத்துவதும்
நம் சுதந்திரமே
…
சுதந்திரத்தை போற்றுவோம்…
உண்மையான சுதந்திரத்தை நாடுவோம்…
சுதந்திர தின வாழ்த்துக்கள்
—
என்றும் அன்புடன்,
தனா
( எனுடைய சுதந்திரம் – இந்த கருத்தை எழுதவது;
உங்களுடைய சுதந்திரம் – இதை படித்து தங்கள் கருத்தை கூருவது )
Sorry, you are not allowed to access this page.