வாழ்க்கை எனும் பள்ளிக்கூடத்தில்
நாம் அனுபவப்பாடம் பயின்று வருகிறோம்
வாழ்க்கை என்பது
பாடத்திட்டமில்லாதப் பள்ளிக்கூடம்.
ஆசிரியராய் காலமும், நம் மனசாட்சியும்.
பாடமாக நாம் செய்த தவறுகலும்,
அடைந்த தோல்விகலும்,
இவற்றில் கிடைத்த அனுபவங்களும்.
இந்த பள்ளியில் நாம் செய்யும் தவறுகளை
பொருத்து பாடத்திட்டம் அமையும்.
நம் தவறுகள் அதிகமாக அதிகமாக,
அதற்கு ஏற்றாற்போல்,
வாழ்க்கைப் பாடம் கடினமாக இருக்கும்.