கொடுப்பதும் கெடுப்பதும்

August 14th, 2009 by dhans
helping-hand

கொடுத்து கொடுத்து – வாழ்!
கொடுத்து கெடுத்து – வீண்!
கெடுத்து கொடுத்து – பழ்!
கெடுத்து கெடுத்து – ஏனோ ?

தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்

April 14th, 2009 by dhans

புதிதாய் பிறந்தோம் என்று எண்ணி

புதிய கருத்துகள் பரிமாறி

புதிதாய் கொண்டாடுவோம் இந்த

புத்தாண்டை

 

தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!!!

கண்ணீர்

March 24th, 2009 by dhans

null

உண் மனதில் உள்ள

இரணங்கள் எல்லாம்

முத்துக்கள் ஆனதோ!

உண் கண்களில்!!!

தன்னம்பிக்கை

December 8th, 2008 by dhans
self_confidence

தன்னம்பிக்கை இல்லாமல்

பயத்துடன் வாழும் வாழ்க்கையும்,

உயிருடன் கல்லறையில்

உறங்குவதும், ஒன்றே!!!

பூ வின் மீது நீர்த்துளி

July 10th, 2008 by dhans

poovin meethu pani thuli

பூ வின் மீது நீர்த்துளி

இதற்க்கு வாடகை கேட்குமா அந்த பூ?

இல்லை தண்ணிர் வரி தான் கட்டுகிறதா!!!

இந்த நீர்த்துளி கொண்ட பூ!

தப்பு செய்

February 28th, 2008 by dhans

right-wrong 

தப்பு செய்!!! ஆனா தப்பா செய்யாதே!!!

தப்பு செஞ்ச தப்பில்ல, அதையே

தப்பா செஞ்சா தான் தப்பு!!!!

இந்த காலத்துல,

தப்பு செய்றவன் தைரியசாலி, புத்திசாலி.

தப்பு செய்ய பயப்படுறவன் கோழை, பயந்தாங்கோலி.

தப்பே செய்யாதவன்  மனுசனே இல்ல.

அதனால எல்லாரும் தப்ப தப்பாம செய்யனும்.

மாலைச் சூரியனே…

February 26th, 2008 by dhans

sunset

மாலைச் சூரியனே…

சென்று வா, இரவை வென்று வா!!!

நீ வெல்லும் போது,

எங்கள் பொழுது விடியும்!

சில சமயம் நீ தோற்கும் போது,

உன்னை மறைக்கும் அந்த

மழை மேகம் கூட கண்ணீர்விடும்!

எது கடினம்?

February 21st, 2008 by dhans

கருத்திற்க்கினிய கவிதை எழுதுவதா …

அந்த கவிதைக்கு உணர்வைத் தூண்டும் இசை அமைப்பதா …

இந்த இசைக்கு அந்த கவிதையை பாடலாய் பாடுவதா …

இப்படிப் பட்ட பாடலுக்கு இயல்பாக நடிப்பதா …

இல்லை இவை அனைத்தையும் இயக்குவதா …

எது கடினம்?

director

மதுவும் மாதுவும்

February 20th, 2008 by dhans

மது மாது,

இவை இரண்டையும்,

தொடாதவன் வாழ்க்கை கேலி!

தொட்டவன் வாழ்க்கையில்

மற்றதெல்லாம் போலி!!!

மது.

பிடித்ததும் கிடைத்ததும்

February 18th, 2008 by dhans

பிடித்ததெல்லாம் கிடைத்துவிட்டால், அது

கிடைத்தபின் பிடிப்பதில்லை.

கிடைத்ததெல்லாம் பிடித்துவிட்டால், அது

பிடித்தபின் நிலைப்பதில்லை!!!

see saw

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால், அது

நடந்தபின், அதை நாம் நினைப்பதில்லை.

நடந்ததையே நினைத்திருந்தால், அது நாம்

நினைப்பதுபோல் நடக்க போவதில்லை!!!

Continue reading “பிடித்ததும் கிடைத்ததும்” »